
எதிர்நீச்சல் சீரியலில் அருண் வெளியூருக்கு செல்ல வில்லை என்ற விஷயத்தை அறியும் சாருபாலா, குணசேகரனிடம் சென்று இனிமேல் நீ எதையாச்சும் பண்ணனும் நெனச்ச உன்ன நா சும்மா விடமாட்டேன். அருணுக்கு எதுவும் ஆகக்கூடாது என குணசேகரனை எச்சரிக்கிறார். மற்றொரு பக்கம் வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்கள் முன்னாடி ஈஸ்வரி, நந்தினியை குணசேகரன் அசிங்கப்படுத்த அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார் ஈஸ்வரி.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைக்கேட்டு குணசேகரன் போதும் நிறுத்து என்று கத்துகிறார். இந்த சீரியலில் இப்போது எல்லோரும் குணசேகரனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இந்த சீரியலில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் கோவிலில் பரிகாரம் செய்ய ஆதிரையை கரிகாலனுடன் உட்கார சொல்லி கதிர் கட்டாயப்படுத்துகிறார். இதுக்கு ஆதிரை என்னால் முடியாது. நீ சொன்னா எதனாலும் கேட்கணுமா என சண்டை போட ஆதிரையின் கழுத்தைப் பிடித்து உட்கார வைக்கிறார்.
இதை தடுத்து நிறுத்தும் ஜனனி போதும் நிறுத்து என கதிரை எச்சரிக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோட்டில் ஆதிரை ஜனனியின் சப்போர்ட்டுடன் நிச்சயம் அருணை திருமணம் செய்து கொள்வார் என்று தான் தெரிகிறது. ஆதிரையின் இந்த முடிவால் குணசேகரன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.