
எதிர்நீச்சல் சீரியலில் சக்தி ஜனனி புது கம்பெனி ஆரம்பிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்கின்றனர். இதை கேட்ட குணசேகரன் வீட்டையே ரணகளம் செய்கிறார். மேலும் கதிர், ஞானம் இருவரும் சக்தியிடம் நீ எப்படி தனியா கம்பெனி ஆரம்பிக்கலாம். இதுக்கெல்லாம் உனக்கு பணம் யார் தந்தார் என்று கேட்க விசாலாட்சி நான் என்னுடைய நகையை கொடுத்தேன் என்கிறார். இதற்கு குணசேகரன் கேவலமாக சக்தியை பேச கோபத்தில் அந்த நகையை மீண்டும் விசாலாட்சியிடமே கொடுக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விசாலாட்சி குணசேகரன் பேச்சையும் மீறி சக்தியிடம் இந்த நகை உனக்கு மட்டும் தான். யார் என்ன சொன்னாலும் நான் என் பிள்ளைக்கு கொடுப்பேன் என்கிறார். இதை கேட்ட குணசேகரன் ஆடி போகிறார். பின் தர்ஷன், தர்ஷினி இருவரும் மன வருத்தத்தில் ஈஸ்வரியிடம் இனி அந்த ஆள் காசுல நாங்க படிக்க மாட்டோம். இனி காலேஜுக்கு போல என்று சொல்கின்றனர். இதை கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.