எதிர்நீச்சல் சீரியலில் இந்த திருவிழாவின் முடிவில் யார் உயிர் பறிபோகப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இப்படி இருக்கையில் ஜீவானந்தம் குணசேகரனை தீர்த்து கட்ட திருவிழாவிற்கு வருகிறார். இதை ஈஸ்வரி எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜீவானந்தம் வெண்பா இருவரும் கோவிலுக்கு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அவர்களைப் பார்த்து ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் குணசேகரன் வருகிறார். இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து குணசேகரன் ஈஸ்வரியிடம் இதுக்கு தான் உடம்பு சரியில்லன்னு சொல்லி டிராமா போட்டியா என கேவலமாக பேசுகிறார். பின் தர்ஷினி ஜீவனந்தத்திடம் வெண்பா ஈஸ்வரியை அம்மா என்று கூப்பிடும் போது நான் உங்களை அப்பானு கூப்பிடலாமா என்று கேட்கிறார். இதை பார்த்து ஈஸ்வரியும் ஜீவானந்தமும் கண்ணீர் வடிக்கின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
இனி இந்த ஹிட் சீரியல் ஒளிபரப்பாகாது., வெளியான ஷாக் நியூஸால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!