
எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குணசேகரன், கதிர் இருவரும் அப்பத்தா மற்றும் வீட்டுப் பெண்களை கோவிலுக்கு வர சொல்கின்றனர். இன்னொரு பக்கம் ரேணுகா, ஈஸ்வரி எல்லோரும் ஜீவானந்தத்தின் மகளை எப்படி தனியாக விட்டுட்டு செல்வது என நினைத்து பயப்படுகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இன்னொரு பக்கம் அப்பத்தா நான் கோவிலுக்கு வரவில்லை என்று சொல்ல கதிரும், குணசேகரனும் கட்டாயப்படுத்துகின்றனர். உடனே அப்பத்தா நான் வரலைன்னு சொன்னா உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு. ஏதும் திட்டம் இருக்கா என நக்கலாக பேசுகிறார். உடனே கதிர் இன்னும் எல்லாம் ஒரு நாள் மட்டும் தான் என்று சொல்ல அப்பத்தா சிரித்துக் கொண்டே குணசேகரனை பார்க்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.