
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் எப்படியாவது வளவனை வைத்து ஜீவானந்தத்தையும், அப்பத்தாவையும் தீர்த்துக்கட்ட பல திட்டங்களை தீட்டுகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் செய்யும் மாஸ்டர் பிளான் தெரிந்து அப்பத்தாவுக்கு நாங்க துணையா இருக்கோம் என ஜனனி, நந்தினி எல்லாம் சவால் விடுகின்றன. இப்படி சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ப்ரோமோவில் குணசேகரன், கதிர் இருவரும் யாருக்கும் தெரியாமல் வளவனிடம் ஜீவானந்தத்தை தீர்த்துக் கட்டணும் என பேசி கொண்டு இருக்கின்றனர். இதை மறைந்து நின்று நந்தினி கேட்டு விடுகிறார். அதை பார்த்த கதிர் குணசேகரனிடம் சொல்ல அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் ஜான்சி ராணி, விசாலாட்சியிடம் ஈஸ்வரி, ரேணுகா யாரோ ஒரு குழந்தையை அழைத்து வந்ததாக சொல்ல யார் என கேட்டு சத்தம் போடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.