
எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுதுதான் குணசேகரன், கதிரை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஞானத்திற்கு புரிய வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் இதெல்லாம் பொய்யா இருக்குமோ என அவர் நினைக்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலுக்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் குடும்பத்தில் உள்ள எல்லோரும் அப்பத்தா இறந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது விசாலாட்சி அண்ணன் இது கடவுள் போட்ட கணக்கு மாதிரி தெரியல. மனுஷங்க தான் பிளான் பண்ணி கொலை செய்திருக்கிறார்கள் என்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
உடனே சக்தி வேறு யாரு இந்த குணசேகரன் தான் என்கிறார். அப்போது விசாலாட்சி சொந்த அண்ணன் கூட பாக்காம உன் மேலையே பழிய போடுகிறான் என சொல்லி வருத்தப்படுகிறார். பின் குணசேகரன் ஞானத்திடம் அப்பத்தா போட்டோவுக்கு மாலை போடு என்று சொல்ல ஜனனி அதெல்லாம் செய்யக்கூடாது என குணசேகரனை எதிர்த்து பேசுகிறார். அதையும் மீறி நீங்கள் செஞ்சா இனி நான் பண்ற வேலையே வேற மாதிரி இருக்கும் என எச்சரிக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.