
எதிர்நீச்சல் சீரியலில் இப்போது குணசேகரனின் ஆட்டத்தை விட கதிரின் ஆட்டம் தான் தலை தூக்கி உள்ளது. குணசேகரன் பத்திரிக்கை கொடுக்க வெளியே சென்றதால் கதிர் வீட்டில் உள்ள பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுகிறார். நேற்றைய எபிசோடில் கூட ரேணுகாவை பேசக்கூடாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் கோபமடைந்த விசாலாட்சி கதிரை திட்டி வெளியே அனுப்புகிறார். இப்படி இருக்கையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஜனனி ஞானவேல் இடம் சொல்கிறார். இதைக் கேட்ட ஞானவேல் ஆத்திரத்தில் கதிரை அடிக்க செல்கிறார். அப்போது நந்தினி தடுத்து அவனிடம் யாரும் பேச வேண்டாம். அவன் பண்ணும் அநியாயத்துக்கு நிச்சயம் ஏதாவது நடக்கும் என சாபம் விடுகிறார்.
சென்னையில் மீண்டும் உச்சத்தை தொட்ட மின் நுகர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!!!
இதை மறைந்திருந்து கேட்ட கதிர் நந்தினியை அடிக்கிறார். வீட்டில் நடக்கும் பிரச்சனையை ஜனனியால் சமாளிக்க முடியாததால் சக்தி க்கு போன் பண்ணி உடனே வீட்டுக்கு வரும்படி சொல்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைய அடுத்த வரும் எபிசோடுகளில் வெளியூருக்கு சென்ற குணசேகரன் வீட்டுக்கு திரும்பினால் அவர் என்ன எல்லாம் பிரச்சனை செய்யப் போகிறார் என தெரியவில்லை.