
எதிர்நீச்சல் சீரியல் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த திருவிழாவின் முடிவில் அப்பத்தா சொத்தை யாரிடம் ஒப்படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அதற்கான தீர்வு கிடைத்துள்ளது. அதாவது இன்றைய எபிசாசோடுக்கான ப்ரோமோவில் அப்பத்தா தான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகிறார். அப்போது எனக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்ததற்கு காரணம் என் பேரன் குணசேகரன் தான் என்கிறார்.

பின் என்னுடைய மொத்த சொத்தையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நான் ஜீவனந்தத்திடம் ஒப்படைக்கிறேன் என்கிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த கதிர் ஜீவானந்தத்தை தீர்த்து கட்ட வேண்டும் என ஆவேசப்படுகிறார். ஆனால் குணசேகரன் கதிரை சமாதானப்படுத்தி விட்டு அப்பத்தாவை முறைத்து பார்க்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் கதிரை சுட்டுத்தள்ள கௌதம் குறி வைக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.