ஈஸ்வரி, ஜனனியை ஜெயிலில் தள்ளிய குணசேகரன்.., நடுக்காட்டில் தவிக்கும் தர்ஷினி., சூடுபிடிக்கும் ப்ரோமோ!!!

0
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போனதற்கு ஜீவானந்தம், ஈஸ்வரி, ஜனனி எல்லோரும் தான் காரணம் என குணசேகரன் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். போலீசாரும் குணசேகரனுக்கு ஆதரவாக அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்துகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குணசேகரன் என் குழந்தையை கடத்தியதற்கு இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என கோர்ட்டில் வாதாடுகிறார்.
இதையடுத்து நீதிபதி ஜீவானந்தம், ஈஸ்வரி எல்லோருக்கும் தீர்ப்பு எழுதுகிறார். ஆனால் அது என்னவென்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் தர்ஷினி நடுக்காட்டுக்குள் எங்கே போவது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார். இப்போது தர்ஷினியை காப்பாற்ற நினைத்த ஈஸ்வரியையும் குணசேகரன் ஜெயிலில் தள்ளிவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here