
எதிர்நீச்சல் சீரியல் இப்போது அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் தான் அப்பத்தாவை கொலை செய்து விட்டார் என்று கதிர், ஞானவேல் வீட்டில் வந்து கதறுகின்றனர். அப்பத்தா இறந்த செய்தியை கேட்டு ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, எல்லோரும் தலையில் அடித்துக் கொண்டு அழுகின்றனர். இன்னொரு பக்கம் சக்தி நீங்கதான் அப்பத்தாவை ஏதோ செஞ்சிருக்கீங்க என அவர்களின் சட்டையைப் பிடித்து சண்டை போடுகிறார்.
இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சக்தி, ஜனனி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கதிர், ஞானவேல் மேல் கம்ப்ளைன்ட் கொடுக்கின்றனர். மேலும் அப்பத்தான் இறந்த இடத்தை பார்த்து அழுகின்றனர். இன்னொரு பக்கம் ஈஸ்வரி ஜீவானந்தத்தை தேடி செல்கிறார். அப்போது ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து ஒரு இடத்திற்கு வர சொல்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ஜீவானந்தம் அப்பத்தாவை காப்பாற்றி இருப்பார் என்று தான் தெரிகிறது.