
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா மயக்கமானதை தொடர்ந்து அவருக்கு என்னாச்சு என குடும்பத்தில் உள்ள எல்லோரும் பதட்டத்தில் உள்ளனர். அந்த நேரத்தில் குணசேகரன், கதிர் அப்பத்தாவை தூக்கிக்கொண்டு நீங்க தான் பட்டம்மாளின் இந்த நிலைமைக்கு காரணம் என சத்தம் போட்டுவிட்டு செல்கின்றனர். பின் அப்பத்தாவை காரில் ஏற்றி கொண்டு அவர்கள் செல்கின்றனர். அடுத்ததாக ஜனனி எல்லோரும் காரை பின் தொடர ஆனால் அவர்களை காணவில்லை. இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த ப்ரோமோவில் அப்பத்தாவை குணசேகரன், கதிர் எந்த ஹாஸ்பிடலிலும் அட்மிட் செய்யவில்லை. இதனால் ஜனனி என்னாச்சு என பதறிக்கொண்டு சக்தியை குணசேகரனுக்கு போன் பண்ண சொல்கிறார். உடனே சக்தி ஞான வேலுக்கு போன் பண்ண அவர் எல்லோரும் வீட்டுக்கு வாங்க என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். பின் ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் விஷயத்தை சொல்ல அவர் அப்பத்தா உயிருக்கு பெரிய ஆபத்து என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.