ஆதிரை அடிக்க கை ஓங்கிய குணசேகரன்.., சீறி பாய்ந்த கதிர்.., சூடுபிடிக்கும் எதிர் நீச்சல் ப்ரோமோ!!!

0
எதிர்நீச்சல் சீரியலில் ஒரு வழியாக ஜனனி, ஈஸ்வரி எல்லோரும் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து போலீசில் சொல்ல வருகின்றனர். இந்த பக்கம் ஜீவானந்தத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஈஸ்வரி நந்தினி எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளதாக இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு தகவல் கொடுக்கிறார்.
உடனே அவர் 4 பேரையும் கைது செய்யும் படி சொல்கிறார். அடுத்ததாக ஆதிரை குணசேகரனிடம் எங்களுக்கு செய்த துரோகத்துக்கு எல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு என மிரட்டுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரன் ஆதிரையை அடிக்க கை ஓங்குகிறார். அந்த நேரத்தில் கதிர் குணசேகரனின் கையை பிடிக்கிறார். இதை பார்த்த குணசேகரன் என்ன செய்வதென்று தெரியாமல் ஆடிப் போகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here