
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஈஸ்வரியின் நடத்தையை பற்றி கேவலமாக பேச தர்ஷன், தர்ஷினிக்கு கோபம் வருகிறது. மேலும் தர்ஷன் இனி அந்த ஆளு உன்ன ஏதாவது பேசினா சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்ல ஈஸ்வரிக்கு சந்தோசம் தாங்கவில்லை. இன்னொரு பக்கம் குணசேகரன் கொட்டத்தை அடக்க அப்பத்தா பல மாஸ்டர் பிளான் போட்டுக் கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அப்பத்தா போலீசுடன் வீட்டுக்கு வருகிறார். அப்போது இவங்க எல்லாம் எதுக்கு இங்க வந்திருக்காங்க என்று அப்பத்தா கேட்க ரேணுகா ஈஸ்வரி அக்காவை இவரு டைவர்ஸ் பண்ண போறாராம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த பிரச்சனையை பேச தான் இவங்க எல்லாம் வந்திருக்காங்க என்கிறார். உடனே அப்பத்தா இதுக்கு முன்னாடி தீர்க்க வேண்டிய விஷயத்துக்கே இன்னும் முடிவு கிடைக்கல. இதுல இது வேறயா என்கிறார். பின் குணசேகரன், ஜனனி-சக்தி இந்த வீட்டுக்குள் இருக்கக் கூடாது என்று சொல்ல அப்பத்தா நான் இருக்கிற வீட்ல தான் இவங்க இருப்பாங்க என்கிறார். இதை கேட்ட குணசேகரன் அப்போ நான் இந்த வீட்டை விட்டு வெளியே போணுமா என்று கேட்க அது உன்னுடைய இஷ்டம் என்று அப்பத்தா நக்கலாக பதில் சொல்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.