தர்ஷினியை கடத்தி கொடுமைப்படுத்தும் குணசேகரன்.., போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்கும் ஜனனி!!!

0
தர்ஷினியை கடத்தி கொடுமைப்படுத்தும் குணசேகரன்.., போலீஸ் உதவியுடன் கண்டுபிடிக்கும் ஜனனி!!!
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் எப்படியாவது சொத்தை தன் பெயருக்கு மாற்றி விட வேண்டும் என பல சூழ்ச்சிகளை செய்கிறார். மேலும் சொத்துக்காக தர்ஷினியை அவர்தான் கடத்தி வைத்துள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இன்னொரு பக்கம் ஜனனி போலீஸ் உதவியுடன் தர்ஷினியை தேடிச் செல்கிறார். மேலும் தர்ஷினி தன்னை கடத்தி வைத்துள்ளவர்களிடம் நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் என்னை எங்க அம்மாவிடம் விட்டு விடுங்கள் என கெஞ்சுகிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் தர்ஷினி கடத்தி வைத்துள்ள இடத்திற்கு குணசேகரன் செல்வாராம். அந்த நேரம் பார்த்து போலீசாரும் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுவார்களாம். உடனே தர்ஷினி காப்பாற்றுவதற்காக சக்தி, ஜனனி போலீஸ் எல்லாரும் அந்த இடத்திற்கு செல்வார்களாம். அப்போதுதான் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் இத்தனை நாள் தர்ஷினியை கடத்தி சித்திரவதை செய்தது குணசேகரன் என்பது தெரிய வருமாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here