தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்துவின் கதாபாத்திரம் வெகுவாக எல்லோரையும் கவர்ந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் இவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் இவருக்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்ந்தெடுக்கும் பணியில் சீரியல் குழு மும்முரம் காட்டி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி பல படங்களில் வில்லன், குணசித்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இவரை தவிர பிரபல நடிகர்களான ராதா ரவி, பசுபதி, இளவரசன் உள்ளிட்டோரிடம் தற்போது இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவருக்கு சிறையில் A-கிளாஸ் கேட்ட மகா லட்சுமி.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!