தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர, துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மாரிமுத்துவுக்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது என்றால் எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். அதிலும் இந்த சீரியலில் இவரின் “ஏய் இந்தாமா” டயலாக் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி புகழின் உச்சிக்கு சென்ற மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். இவரின் இறப்பு பலருக்கும் பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்துவின் தயார் “என்னுடைய மகனுக்கு இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல. இயக்குனர் ஆகணும்னு சென்னைக்கு போய் ரொம்ப கஷ்டப்பட்டான். ஆனால் இன்னைக்கு நல்ல நிலைமையில் இருக்கும் போது செத்துப் போயிட்டான். கடைசியா என்ன சென்னைக்கு வாமான்னு ஆசையா கூப்பிட்டான். ஆனா நான் போகல என தன் மகனை நினைத்து கதறி அழுது பேசியுள்ளார்.
இனி குணசேகரனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி., ரசிகர்களின் கருத்து இதுதான்!!
View this post on Instagram