8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள் – முதல் நாளே மாணவர்கள் போராட்டம்!!

0

கொரோனா காலக்கட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. இந்த முதல் நாளிலேயே ஈரோட்டில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகத்தினுடைய கல்லூரியாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட பின்பும் 2 ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற அரசு கல்லுரிகளில் கல்விக்கட்டணம் 13,620 ரூபாய் மட்டுமே, அனால் இந்த கல்லூரி அரசு கல்லுரியாக மாற்றம் செய்த பின்பும் கல்விக்கட்டணமாக ரூ.3.85 லட்சம் வசூலிக்கிறது.

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இதுதொடர்பாக பலமுறை, அதிகாரிகள் மற்றும் செயலாளர்களிடம் அரசுக்கட்டணம் குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கின் 8 மாதங்களுக்கு பின் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், வகுப்புகளை புறக்கணித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here