குக் வித் கோமாளி தர்ஷனுக்கு நேர்ந்த கொடுமை.., பெண் போல பேசி பணமோசடி.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
குக் வித் கோமாளி தர்ஷனுக்கு நேர்ந்த கொடுமை.., பெண் போல பேசி பணமோசடி.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
குக் வித் கோமாளி தர்ஷனுக்கு நேர்ந்த கொடுமை.., பெண் போல பேசி பணமோசடி.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

நடிகர் தர்ஷன் பெயரில் போலி முகநூல் மூலம் பண மோசடி செய்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தர்ஷன்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் தர்ஷன். இவர் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த கனா என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்திலும் நடித்து பட்டையை கிளப்பியுள்ளார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். அவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் இவருக்கு என்றே ரசிகை பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் இணயத்தை Follow செய்து வருகின்றனர். இந்த நிலையில் முகநூலில் தர்ஷன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரை பண மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நடிகர் தர்ஷன் போட்டோவை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு அனுப்பி, அதையும் அந்த பெண் accept செய்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண் நன்றாக பேசி பழகி வாட்ஸ்அப் எண்ணை அனுப்பியுள்ளார். அதற்கடுத்து வாட்ஸ் அப் மூலமாக தகவல்களை பரிமாறிக்கொண்டு வீடியோ கால் பேசி அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை screenshot எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சம்முவின் “சாகுந்தலம்” படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

ஆனால் அந்த பெண் பணம் தர மறுத்ததால், அப்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலை தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வாங்கியுள்ளார். இதுவரை ரூ.2 லட்சத்திற்கும் மேலாக பணத்தை மிரட்டி வாங்கியுள்ளார். அதன் பின்னர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பெயரில் விசாரித்த காவல்துறை, அந்த மர்ம நபரின் நம்பரை ட்ராக் செய்தார்கள். அப்போது அந்த பெண்ணை பணம் கேட்டு மிரட்டியது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கேடி சகோதரர்கள் அலாவுதீன், வாகித் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here