ஈரமான ரோஜாவே புகழ் கமிட்டான புது சீரியல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியலில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷியாம் தற்போது புதிய சீரியலில் களமிறங்கவுள்ளார். அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரமான ரோஜாவே ஷியாம்

ஈரமான ரோஜாவே சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்தது. மலர், வெற்றி ஜோடிக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அதனை விட அகிலா புகழுக்கு ஆதரவு கிடைத்தது. சோசியல் மீடியாவை திறந்தாலே அகிலா, புகழ் ஸ்டேட்டஸ் தான். புகழ் இதுவரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைத்தது கிடையாது. அவர் நடித்த ஈரமான ரோஜாவே சீரியல் தான் அவரை இந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க செய்தது. ஏகப்பட்ட ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார் ஷியாம். ஆனால் அவருக்கு வாய்ப்பும் குறைவாக தான் உள்ளது.

இப்பொழுது ஈரமான ரோஜாவே சீரியலும் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய சீரியலில் களமிறங்கவுள்ளார் ஷியாம். அதற்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஆனால் அது எந்த சீரியல் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. தற்போது அந்த சீரியல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதாவது பாவம் கணேசன் என்ற சீரியலில் தான் அவர் இணையவுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here