தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக EPS தேர்வு !!!

0

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக EPS தேர்வு !!!

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

திமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட உள்ளது. அதிமுகவைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே யார் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்பார் என்பதில் குழப்பம் நிலவியது. எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

பா ஜ கா தரப்பில் இருந்தும் எடப்பாடி கே. பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here