Wednesday, April 24, 2024

ஜனவரியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் – இபிஎஸ் & ஓபிஎஸ் அறிவிப்பு!!

Must Read

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருவரும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

அதிமுக பொதுக்கூட்டங்கள்:

தற்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகளை தொடங்கி விட்டன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில தினங்களுக்கு முன் தன் தொகுதியான எடப்பாடியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். தற்போது அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி அன்று காலை 8.50 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் வைத்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னிர்செல்வமும் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருவரும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர். இந்த கூட்டம் அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

மேலும் இதற்கான அழைப்பிதழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறும். மேலும் வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைபிடிக்குமாறு கூறியுள்ளனர். மேலும் அனைவரும் தங்களது அழைப்பிதழ்களை கையில் வைத்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்றும் கூறியுள்ளனர்.

புதிய வகை கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் அடைய வேண்டாம் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

அனைத்து உறுப்பினர்களும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பெண்களின் திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி திட்டம்., இந்த தகுதி போதும்? அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு!!!

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -