அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி மூலம், தங்களுக்கான வைப்பு தொகையை சேமித்து வரும் நிலையில், இந்த EPF கணக்கில் முக்கிய அப்டேட்டை செய்வதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளது.
எளிய வழிமுறைகள்:
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் பிடித்தம் செய்யப்பட்டு, EPF கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த EPF கணக்கில், தங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி போன்றவற்றை வீட்டில் இருந்தே மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை செய்ய நீங்கள், சேவா போர்டல் பகுதிக்கு சென்று உங்கள் UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும். அதன் பிறகு “நிர்வகி” என்பதை கிளிக் செய்து, “தொடர்பு விவரங்கள்” என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கு, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
இந்த மாதிரி ஒரு கேரக்டருக்கு தான் வெயிட் பண்றேன்., நடிகர் விஷால் ஓப்பன் டாக்!!
அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை உள்ளிட்டால், நீங்கள் விவரங்களை மாற்ற வேண்டிய புதிய பகுதி ஓப்பனாகும். அதன் பின் சரியான விவரங்களை மாற்ற வேண்டும். அதன் பிறகு மீண்டும் உங்கள் மொபைலுக்கு வரும் அங்கீகாரப் பின் நம்பரை உள்ளீடு செய்தால், இந்த அப்டேட் எளிதில் செய்யப்படும். கடைசியாக மாற்றங்களை சேமி என்பதை கிளிக் செய்தால், இந்த அப்டேட் வெற்றிகரமாக ஈசியாக முடிக்கப்படும்.