மத்திய அரசின் EPFO போட்டித் தேர்வு அறிவிப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

0
மத்திய அரசின் EPFO போட்டித் தேர்வு அறிவிப்பு., வெளியான முக்கிய தகவல்!!!
மத்திய அரசின் EPFO போட்டித் தேர்வு அறிவிப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி, கணக்கர், உதவி PF ஆணையர் ஆகிய பதவிகளுக்கான போட்டி தேர்வுகள் ஜூலை 2ம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டி தேர்வில் வெற்றி பெற விரும்பும் சிலர்க்கு எந்தவிதமான பாடத்திட்டம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்கள் தெரியாமல் இருக்கும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் போட்டித் தேர்வு விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இதில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் என இரு நிலைகள் உள்ளது. எழுத்துத்தேர்வை பொறுத்தவரை பொது ஆங்கிலம், Genaral knowledge, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டம், இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம், தொழில்துறை விதிகள், கணினி பயன்பாடுகள், பொது மன திறன் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

மாணவர்களே.., பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்…, கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

இரண்டு மணி நேரம் நடக்கும் எழுத்துத்தேர்வில், 120 கேள்விகளில் ஒவ்வொரு சரியான விடைக்கும் தலா 2.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு தலா 0.833 மதிப்பெண் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே தேர்வர்கள் நேரத்தை வீணாக்காமல் இப்போதே போட்டித் தேர்வுக்கு தயாராகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here