EPFO பயனாளர்களா நீங்கள்?? அப்போ இந்த Information உங்களுக்கு தான்.., மிஸ் பண்ணாம படிங்க!

0
EPFO பயனாளர்களா நீங்கள்?? அப்போ இந்த Information உங்களுக்கு தான்.., மிஸ் பண்ணாம படிங்க!
EPFO பயனாளர்களா நீங்கள்?? அப்போ இந்த Information உங்களுக்கு தான்.., மிஸ் பண்ணாம படிங்க!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்கள், தங்கள் பி.எஃப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அந்த வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எளிய வழிகள்:

தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்நிலையில் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருக்கும் தொகையை சில வழிகளில் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். அதாவது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குறுந்தகவல் ( SMS ) மூலம் அறிந்து கொள்ளும் வழி உள்ளது.

அதாவது யுஏஎன் எனப்படும் அடையாள எண்ணுடன் உங்களது தனிநபர் விவரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தால் குறுந்தகவல் ( SMS ) மூலமாகவே பி.எஃப். விவரங்களை அறியலாம். இதை தொடர்ந்து உங்கள் செல்லிடப்பேசியில் இபிஎஃப்ஓ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த செயலில் மூலமாகவும் வருங்கால வைப்பு நிதி விவரங்களை அறியலாம். முதலில் Employee centric services என்பதை தேர்வு செய்து, view passbook என்ற வாய்ப்பை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் யுஏஎன் மற்றும் ஓடிபியை பதிவிட்டால், உங்கள் கணக்கின் விபரங்கள் அனைத்தும் தெரியவரும்.

பழைய மெசேஜை ஈஸியா தேடி எடுக்கணுமா?? வந்தாச்சு வாட்ஸ் ஆப் -இல் சூப்பர் அப்டேட்.., குஷியில் பயனர்கள்!!

மேலும் யுஏஎன் எனும் அடையாள எண் இல்லாதவர்கள் கணக்கு விவரங்களை www.epfindia.gov.in இணையதளத்துக்குச் செல்லவும். அதாவது click here to check your PF Balance என்பதை தேர்வு செய்யவும். தொடர்ந்து மாநிலம், முதன்மை அலுவலகம், வணிக நிறுவனத்தின் கோடு, பிஎஃப் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிடவும். பிறகு I agree என்பதை அழுத்தி, உங்கள் வருங்கால வைப்பு நிதி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here