ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் ரத்தா??? தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் விரைவில் ஆலோசனை!!!

0

ஜேஇஇ, நீட் நுழைவு தேர்வு கொரோனா தொற்று  காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும்,  நடத்த முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கான தேசிய  தேர்வு முகமையின்  மறுஆய்வுக் கூட்டம், விரைவில் நடக்கவுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரனோ பரவல் தினமும் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும் காரணத்தினால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகபிரதமர் மோடி அறிவித்தார். மாணவர்களின் நலன் முக்கியம் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கிடும் வகையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி  உத்தரகாண்ட், ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உட்பட 10  மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின்கீழ் நடக்கும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வை ரத்து செய்தன.  தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.   பொறியியல் நுழைவுத் தேர்வு ஜே.இ.இ  மெயின் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் ஆகிய கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடத்த முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கான தேசிய தேர்வு முகமையின்   மறுஆய்வுக் கூட்டம், விரைவில் நடக்கவுள்ளது.

அடுத்த 15 நாளில் தேர்வு  நடத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து  செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here