இனி மதிய உணவுத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஏற்பாடு.., மத்திய அரசு அறிவிப்பு!!!

0
இனி மதிய உணவுத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஏற்பாடு.., மத்திய அரசு அறிவிப்பு!!!
இனி மதிய உணவுத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஏற்பாடு.., மத்திய அரசு அறிவிப்பு!!!

ரேஷன் கடை மற்றும் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி

நாடு முழுவதும் மக்கள் ஊட்டச்சத்து நலன் கருதி செறிவூட்டப்பட்ட அரிசி மத்திய அரசால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், விட்டமின் பி12 அடங்கிய அரிசி மணிகளை 1:100 என சாதாரண அரிசியுடன் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மூன்று கட்டமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இத்திட்டத்தை முதற்கட்டமாக திருச்சியில் 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. அடுத்ததாக தற்போது நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடியாக கொண்டு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டின் விருதுநகர் மற்றும் ராமநாதபுர மாவட்டங்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

சென்னைவாசிகளே கவனம்., வரும் பிப் 1 ம் தேதி இந்த சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை.., வெளியான அறிவிப்பு!!

இதை தொடர்ந்து இப்போது இறுதிக்கட்டமாக 2024 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடை மற்றும் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்திலும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மக்களிடம் ஏற்படும் ரத்த சோகை நீங்கும், தாய்மார்களின் கருவளர்ச்சி, நரம்பு மண்டலம் உறுதி என மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் என வாணிபக் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here