வாளால் கேக்கினை வெட்ட திணறிய இங்கிலாந்து ராணி… வெளியான வைரல் வீடியோ!!!

0

ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாட்டில் வாளால் கேக்கினை வெட்ட தெரியாமல் தடுமாறிய இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் அவர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

47-வது  ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தற்போது இங்கிலாந்தில் உள்ள காா்ன்வால் மாகாணத்தில் நேற்று தொடங்கியது.  இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். உடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து பங்கேற்றனர்.

இதில் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது நிகழ்ச்சியின் தொடக்கமாக கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது எலிசபெத் ராணி கத்தியை விடுத்து தனது பாதுகாவலர் வைத்திருந்த வாலை வைத்து கேக் வெட்ட முயன்றார். அப்போது வாளால் கேக் வெட்ட தெரியாமல் தடுமாறியதால் அருகில் இருந்தவர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டி அனைவர்க்கும் பகிர்ந்தளித்தனர்.

ராணி வாள் கொண்டு கேக் வெட்ட முயன்றது அங்கு சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. தற்போது இங்கிலாந்து ராணி வாளால் கேக் வெட்ட முயன்ற வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here