பார்லிமென்டில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர் – தவறை உணர்ந்ததாக பேச்சு!!

0

இங்கிலாந்து நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, மது விருந்தில் கலந்து கொண்டதற்காக, அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்லிமென்டில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

பகிரங்க மன்னிப்பு :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொடர் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு முயற்சிகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. தொற்று பரவலை கட்டுப்படுத்த, இதுவரை அரசின் கையில் இருக்கும் முக்கியமான ஒரே ஆயுதம் ஊரடங்கு மட்டுமே. இந்த பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் லண்டன் நகரின் டவுனிங் வீதியில் நடந்த மது விருந்தில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்டனர்.

இது ஊரடங்கு விதிகளுக்குப் புறம்பானது என கூறி, எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அந்நாட்டின் பார்லிமென்டில் வைத்து ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னுதாரணமாக திகழ வேண்டிய நானே, இப்படி செய்தது தவறுதான் என தன் செயலுக்கு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here