ஆசிய கோப்பையவே பீட் பண்ணிட்டீங்க.., சாதனை செய்த ஸ்டூவர்ட் பிராட்.., இன்னைக்கு நீங்க தான் ட்ரெண்டு போங்க!!

0
ஆசிய கோப்பையவே பீட் பண்ணிட்டீங்க.., சாதனை செய்த ஸ்டூவர்ட் பிராட்.., இன்னைக்கு நீங்க தான் ட்ரெண்டு போங்க!!
ஆசிய கோப்பையவே பீட் பண்ணிட்டீங்க.., சாதனை செய்த ஸ்டூவர்ட் பிராட்.., இன்னைக்கு நீங்க தான் ட்ரெண்டு போங்க!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்!!

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தற்போது சமநிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரரான ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை ஒன்றை படைத்துளளார். அதாவது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை ஸ்டூவர்ட் பிராட்(566) படைத்துள்ளார்.

மேலும் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் அணிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் ஸ்டூவர்ட் பிராட் 5 ம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஷேன் வார்னே – 708 விக்கெட்டுகளுடன் 2 ஆம் இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் – 667 விக்கெட்டுகளுடன் 3 ஆம் இடத்திலும், அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகளுடன் 4 ஆம் இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் – 566 விக்கெட்டுகளுடன் 5 ஆம் இடத்திலும், கிளென் மெக்ராத் – 563 விக்கெட்டுகளுடன் 6 ஆம் இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here