தனது சொந்த மண்ணில் ஓய்வினை அறிவித்த கிரிக்கெட் நட்சத்திரம்…, இறுதி நாளில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!!

0
தனது சொந்த மண்ணில் ஓய்வினை அறிவித்த கிரிக்கெட் நட்சத்திரம்..., இறுதி நாளில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!!
தனது சொந்த மண்ணில் ஓய்வினை அறிவித்த கிரிக்கெட் நட்சத்திரம்..., இறுதி நாளில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விளையாடியது. இந்த தொடரை, 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வினையும் அறிவித்தார். ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியில், 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்டூவர்ட் பிராட் தனது சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

டி20 யில் 2014ம் ஆண்டும், ஒருநாள் போட்டிகளில் 2016ம் ஆண்டும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இவர், 167 போட்டிகள் 309 இன்னிங்ஸில் 604 விக்கெட்டுகளையும், 244 இன்னிங்ஸில் 3662 ரன்களையும் இங்கிலாந்து அணிக்காக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இறுதி நாள் ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து மைதானத்தில் போட்டோ எடுத்துக்கொண்டார்.

இந்திய அணிக்கு கிடைத்த புதிய கேப்டன்…, பிசிசிஐ-யே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here