வெற்றி யாருக்கு !!!!!! இங்கிலாந்து  – பாகிஸ்தான்

0
pakistan vs england test match
pakistan vs england test match

கொரானா வைரஸ் காரணமாக சர்வேதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனிடையில் வெஸ்ட்இண்டிஸ் அணி சென்ற மாதம் இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டிஸ் அணி வெற்றி பெற்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. குறிப்பாக இந்த போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. தற்பொழுது பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரானா வைரஸ் காரணமாக இந்த தொடரும் பார்வையாளர்கள் இல்லாமலே நடைபெற்று வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பாகிஸ்தான் நல்ல தொடக்கம்

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி கடந்த புதன்கிழமை மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

pakistan vs england test match
pakistan vs england test match

முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியில் தடை பட்டது. ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் இரண்டு விக்கட் இழப்பிற்க்கு 139 ரன்கள் எடுத்துயிருந்தது. ஷான் மசூத் 46 ரன்களும் பாபர் அசாம் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர் .

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே பாபர் அசாம் விக்கெட்டை இழந்தது . ஒரு முனையில் விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான் அணிக்கு மறுமுனையில் ஷான் மசூத் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது நான்காவது சதத்தை நிறைவு செய்தார்.

shan masood
shan masood

இந்த சதம் 24 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் தொடக்க வீரர் அடித்த சதமாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 1996 – இல் ஓவல் மைதானத்தில் சதம் விளாசியிருந்தார் . ஷான் மசூத் 156 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பாகிஸ்தான் அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாபர் அசாம் 69 ரன்களும் ஷதாப் கான் 46 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து திணறல்

தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாகின் அபிரிடி மற்றும் மொஹமத் அப்பாஸ் அதிர்ச்சி கொடுத்தனர். பர்ன்ஸ்(4), சிபிலி(8) மற்றும் ஸ்டோக்ஸ்(0)  ஆகியோர் விக்கெட்டை 12 ரன்களுக்கு இங்கிலாந்து இழந்தது.

pakistan vs england test match
pakistan vs england test match

சற்று தாக்கு பிடித்த இங்கிலாந்து கேப்டன் ரூட் 14 ரன்களில் யாசிர் ஷாவிடம் வீழ்ந்தார். இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 92 ரன்கள் எடுத்துதிருத்தது. போப் 46 ரன்களும் பட்லர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து ஆல் அவுட்

மூன்றாம் நாள் ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய போப் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து பௌலர்கள் சற்று ரன் சேர்க்க 219 ரன்களில் ஆல் அவுட்டானது. வோக்ஸ்  19 ரன்களும், ஆர்ச்சர் 16 ரன்களும் எடுத்தனர்.

england all out
england all out

பிராடு அதிரடியாக ஆடி 29 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் சார்பாக யாசிர் ஷா 4, ஷதாப் கான் 2, அப்பாஸ் 2, அபிரிடி 1 மற்றும் நஸீம் ஷா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 107 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

பாகிஸ்தான் சொதப்பல்

107 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிகிங்சில் சொதப்பி வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் பாகிஸ்தான் எடுத்திருந்தது.

pakistan vs england test match
pakistan vs england test match

இதன் மூலம் பாகிஸ்தான்  244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆசாத் ஷபிக் 29 ரன்களும், ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர். யாசிர் ஷா 12 ரன்களுடனும் அப்பாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிராடு, வோக்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு

பாகிஸ்தான் 244 ரன்கள் முன்னிலை பெற்றிந்ததாலும் கைவசம் 2 விக்கெட் மட்டுமே உள்ளது. இந்த 2 விக்கெட்டையும் சீக்கிரமாக வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

pakistan vs england test match
pakistan vs england test match

மேலும் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின்  விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது எனலாம். வீட்டில் இருந்து போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கும் இது விருந்தாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here