
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், பங்குபெற உள்ள இந்திய வீரர்களுக்கான முழு விவரத்தையும் இப்பதிவில் காணலாம்.
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்
பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு சார்பாக இந்த ஆண்டு தொடக்க முதல் பல்வேறு தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், பர்மிங்காமில் மார்ச் 14 முதல் 19 வரை இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற இருக்கிறது. இதில், இந்தியா, ஸ்பெயின், ஸ்காட்லாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வீரர்கள் பங்கு பெற உள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வகையில், இந்தியா சார்பாக, ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் முன்னணி வீரர்கள் பங்கு பெறுவதற்கு தயாராகி வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில், எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பி வி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
IND vs AUS 3rd ODI: சென்னை சேப்பாக்கம் மைதானம் புதிய கேலரிகள் திறப்பு எப்போது?? வெளியான அப்டேட்!!
இவர்களை தொடர்ந்து, இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், எம்ஆர் அர்ஜுன்-துருவ் கபிலா, ஷிகா கௌதம்-அஷ்வினி பட் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இஷான் பட்நாகர்-தனிஷா க்ராஸ்டோ பங்கு பெற உள்ளனர். இவர்கள் அனைவரும் பதக்கத்துடன் நாடு திரும்புவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.