இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய மகளிர் ஜோடி!!

0
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய மகளிர் ஜோடி!!
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய மகளிர் ஜோடி!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் சீன வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்:

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு சார்பாக பர்மிங்காமில் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னணி வீரர்களான எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி வி சிந்து சுற்று 32-லேயே வெளியேறி ஏமாற்றினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், மகளிருக்கான இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் சுற்று 32 மற்றும் 16 ஆகிய இரண்டு போட்டிகளை வென்று காலிறுதி வரை முன்னேறி இருந்தனர். இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், இந்திய ஜோடி சீனாவின் W. M லி மற்றும் வென்மேய் ஜோடியை எதிர்த்து போட்டியிட்டது.

IND vs AUS 1st ODI: 188 ரன்களுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா…, வேகத்தில் அசத்திய சிராஜ் & ஷமி!!

இந்த போட்டியில் முதல் செட்டை 21-14 என கைப்பற்றிய இந்திய ஜோடி, 2வது செட்டை 18-21 என்ற புள்ளிக்கணக்கில் தவறவிட்டது. இதையடுத்து வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் 3வது செட்டுக்கு போட்டி நகர்ந்தது. இதில், இந்திய ஜோடி அதிரடியாக விளையாடி, 21-12 என்ற புள்ளி கணக்கில் வென்றதுடன், 2-1 என்ற செட் கணக்கில் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here