ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள புதிய ஜெர்சி…, வெற்றிக்கு கைகொடுக்குமா இந்த மாற்றம்??

0
ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள புதிய ஜெர்சி..., வெற்றிக்கு கைகொடுக்குமா இந்த மாற்றம்??

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணி பல திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த இறுதி போட்டியானது வரும் ஜூன் 7ம் தேதி முதல் 11 வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஐசிசி சார்பாக நடத்தப்படும் இந்த போட்டி, முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணி தனது பரம எதிரியான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, இங்கிலாந்தில் வரும் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டியில் இந்த இரு அணிகளும் விளையாட உள்ளன. 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடர்களின் முறையை, ஜூன் 16-20, ஜூன் 28 – ஜூலை 2, ஜூலை 6-10, ஜூலை 19-23 மற்றும் ஜூலை 27-31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்திய மக்களை பெருமைப்படுத்தும் “புதிய நாடாளுமன்ற கட்டிடம்”., புகைப்படம் உள்ளே!!!

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்த நிலையில், இங்கிலாந்து அணி வீரர்களுக்கான விவரங்களை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கு அணிய உள்ள புதிய ஜெர்சியை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஜெர்சியையும் இங்கிலாந்து அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி:

பாட் கம்மின்ஸ் ( சி ), ஸ்டீவ் ஸ்மித் ( விசி ), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மாட் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here