வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம் சம்பளம் – இங்கிலாந்தில் நடந்த வினோதம்!!

0

வறுத்த உருளைக்கிழங்கை சுவைத்து பார்க்கும் வேலைக்காக ரூ. 50,000 சம்பளம் என இங்கிலாந்தை சேர்ந்த ஒரு உணவகம் அறிவித்துள்ளது.

இவ்வுலகில் உருளைக்கிழங்கு பிடிக்காது என்று சொல்லுபவர்கள் மிகக்குறைவு. எந்த வகை உணவாக இருந்தாலும், பிரியாணி, பிரட், கறி, வறுவல், பொரியல், இனிப்பு என்று எல்லா வகை உணவுகளிலும் உருளைக் கிழங்கை சேர்ப்பதால் அதன் சுவை நிச்சயமாக அதிகரிக்கும் என்பது உண்மை. இதுனாலேயே உருளைக்கிழங்கு பிரியர்கள் இவ்வுலகில் அதிகம்.

இந்நிலையில், வறுத்த உருளைக்கிழங்கை சுவைத்து பார்த்து வேலைக்காக ஆட்களை தேடிக்கொண்டிருகிறது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த The Botanist என்ற உணவகம். சுவையான வறுத்த உருளைக்கிழங்கை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான சம்பளம் ரூ.50000 எனவும் அறிவித்துள்ளது.

 

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 19 ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் உலா வரும் இந்த செய்தி உருளைக் கிழங்கு பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here