எலிசபெத் ராணி மறைவால் டெஸ்ட் தொடரில் முக்கிய மாற்றம்.., ECB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
எலிசபெத் ராணி மறைவால் டெஸ்ட் தொடரில் முக்கிய மாற்றம்.., ECB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
எலிசபெத் ராணி மறைவால் டெஸ்ட் தொடரில் முக்கிய மாற்றம்.., ECB வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இங்கிலாந்து அரசி எலிசபெத் காலமானதை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் மிக முக்கிய மாற்றத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.

டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பா??

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒரு நாள், T20 தொடர்களில் விளையாட உள்ளன. இதற்கான முதல் நாள் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்க உள்ள நிலையில் மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை. இதனால் இன்று மதியம் 2 ஆம் நாள் டெஸ்ட் போட்டி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இங்கிலாந்து ராணி 96 வயதான 2ஆம் எலிசபெத் உடல்நலக்குறைவால் சில காலம் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் அவர் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து நகரம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுவது சாத்தியமில்லை.

 

இதனை தொடர்ந்து கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அனைத்து தொடர்களையும் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதன் பின்னர் ஆட்டம் நடைபெறும் தேதி, இடம் ஆகிய விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் இரு அணி வீரர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனாலும் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அங்குள்ள மைதானங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here