பொறியியல் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அதிர்ஷ்டம்!!

0

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் வழங்கப்படும்  7.5% இட ஒதுக்கீடு திட்டத்தை முதல்வர் வருகிற 18ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் துவக்கி வைப்பு:

தமிழக மாணவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசாணையை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.  இது இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் உறுதிப்படுத்தி இருந்தது.  இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாக இதை பார்க்கலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்பு மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதில், சான்றிதழை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் 3290 பேருக்கான  தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. அவர்களுக்குத் தனியாக கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்பில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்பு அறிவிக்கப்பட்டது போலவே தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான 7.5% பொறியியல் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 161 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.  இந்த முக்கிய  கலந்தாய்வை செப்.18ஆம் தேதி தமிழக முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைக்க உள்ளதாகவும் உறுதி தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here