ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க மறுக்கும் அதிகாரிகள்.,, உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!

0
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க மறுக்கும் அதிகாரிகள்.,, உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க மறுக்கும் அதிகாரிகள்.,, உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!!

கோவில் நிலைகளை மீட்க மறுக்கும் அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

கடும் எச்சரிக்கை:

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் இடங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் ஜெயிலுக்கு செல்வார்கள் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகள், பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. அதை மீட்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், நடவடிக்கை எடுக்ககோரி திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் திருச்சி உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

இவரை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும்.., அப்போ ரோஹித் நிலைமை என்ன?? BCCI எடுக்கும் அதிரடி முடிவு!!

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் அதிகாரிகள், கட்டாயம் ஜெயிலுக்கு செல்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோயில் நிலங்களை மீட்க , இது வரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here