தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.6) வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.6) வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.6) வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை வேலையில்லா இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக நாட்டில் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் நாட்டில் ஊரடங்கு, பொது முடக்கம், போன்றவை அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகமாக நிலவியது. இதன் காரணமாக இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல புதிய தொழில் ஒப்பந்தங்களை செய்து வருகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். மேலும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவும் பல வகையில் உதவி தொகைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., கணினி பயிற்சி கல்வி பயின்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் சுயவிவரம், கல்வி சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள “NELLAI EMPLOYMENT OFFICE” என்ற Telegram channel-ல் தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here