EMI செலுத்த மேலும் 3 மாதம் கூடுதல் அவகாசம் – ரிசர்வ் வங்கி ஆளுநரின் அறிவிப்புகள்..!

0

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் பல அறிவிப்புகளையும் அவர் இன்று வெளியிட்டு உள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்புகள்:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். இதனால் உலக பொருளாதாரம் 13 முதல் 32 சதவீதம் வரை குறையும் என கூறியுள்ளார்.

  • ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்படுகிறது. இதனால் 4.4% ஆக இருந்த வட்டி விகிதம் 4% ஆக குறைந்துள்ளது.
  • வீடு, வாகனக் கடன்களுக்கான தவணையை (EMI) செலுத்த ஏற்கனவே 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் 3 மாத காலம் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
  • இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அந்நியச் செலவாணி கையிருப்பில் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
  • அடுத்த சில மாதங்களுக்கு பருப்பு போன்றவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மத்திய அரசின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
  • சிறுதொழில்களுக்கு கடன் வழங்க 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here