இருந்தாலும் இம்புட்டு நல்லவரா இருக்க கூடாது சார்.. எலான் மஸ்க் தன்னுடைய ஒரே ஒரு வீட்டையும் விற்க முடிவு!!!

0

எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் தான் எளிமையாக வாழ போவதாகவும், அதற்காக தன்னிடம் உள்ள எல்லா சொத்துக்களை விற்று விட்டதாக ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். தற்போது தன்னிடம் மீதம் இருக்கும் ஒரே ஒரு வீட்டையும் விற்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

டெஸ்லா என்பது அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாகும் மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் என்பது ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த இரு நிறுவனத்தின் உரிமையாளர் தான் இந்த எலான் மஸ்க் ஆவர். மேலும் இவர் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸை முந்தி முதல் இடத்தை பிடித்தார். அன்றைய நிலையில் இவரின் சொத்து மதிப்பு ரூ.14 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

 

தற்போது இவர் அறிவித்த தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, எலான் மஸ்க் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளதாகவும்  அதற்கென தன்னுடைய வீடுகள் முதலான  பெரும்பாலான  சொத்துக்களை விற்று விட்டதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மேலும் தற்போது புதிய  தகவலாக சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஒரு வீட்டையும் விற்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் அவர் இந்த  வீட்டிற்கு  விலையாக ரூ.274 கோடியை நிர்ணயித்து  உள்ளார். இந்த வீட்டை அவர் 2017 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்,மேலும் இது சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வீடு ஆகும். மேலும் இதன் பரப்பளவு 47 ஏக்கரில் 16 ஆயிரம் சதுர அடியில் இருக்கும். இந்த வீட்டை அவர் ரூ.168 கோடிக்கு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here