ஒரு சரித்திரம் இருண்டது.. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு – அடுத்த மன்னர் இவர் தான்!

0
ஒரு சரித்திரம் இருண்டது.. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு - அடுத்த மன்னர் இவர் தான்!

இங்கிலாந்து நாட்டை ஆட்சி புரிந்து வந்த இரண்டாம் எலிசபெத் அவர்கள் நேற்று (08-09-2022) தனது 96 வது வயதில் காலமாகியுள்ளார்.

இரண்டாம் எலிசபெத்:

உலக வரலாற்றில் பல வருடங்கள் ராணியாக இருந்து இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்து சாதனை புரிந்த ராணி இரண்டாம் எலிசபெத். இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி 1926 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தற்போது தனது 96 வயதில் காலமாகியுள்ளார்.

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று (08-09-2022) மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தியுள்ளார். இவர் 1952-ல் தனது தந்தை மறைவுக்கு பிறகு இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார். இவர் இங்கிலாந்து ராணியாக முடி சூட்டப்பட்டது 1956 ஆம் ஆண்டு தான். மொத்தம் 70 ஆண்டுகள் இவர் அந்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம் உலகிலேயே ஒரு நாட்டை பல வருடங்கள் ஆட்சி செய்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் இரண்டாம் எலிசபெத். ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்று உள்ளார். பிரதமர் மோடி உள்பட பல உலக தலைவர்கள் இவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here