தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சியின் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி அறிவிப்பு., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

0
தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சியின் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி அறிவிப்பு., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!
தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சியின் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி அறிவிப்பு., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி 2010 ஆண்டில் இருந்து தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக தொடக்க கல்வி பட்டய படிப்பினை முடித்திருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் SCERT கீழ் இயங்கும் அனைத்து பயிற்சி நிறுவனங்களிலும் 2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய படிப்புக்கான பயிற்சி தொடங்க உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இந்த படிப்பினை மேற்கொள்ள விரும்பும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு இது குறித்து அரசு ஒரு அறிவிப்பை அளித்துள்ளது. அதாவது தொடக்க கல்வி பட்டயப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறை ஜூலை 2ம் தேதி வரை., பரபரப்பு தகவல்!!

மேலும் விண்ணப்பதாரர்கள் இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 5 முதல் 15 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழும் பட்சத்தில் அருகில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here