தமிழகத்தில் மின்கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு – முழுவிபரம் உள்ளே!!

0
தமிழகத்தில் மின்கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு - முழுவிபரம் உள்ளே!!
தமிழகத்தில் மின்கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு - முழுவிபரம் உள்ளே!!

தமிழகத்தில் எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மின் கட்டணத்தோடு சேர்த்து மின் இணைப்பு கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மின்கட்டண உயர்வு

தமிழகத்தில் தற்போது மின் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, மின் கட்டணத்துடன் மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் மற்றும் சேவைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சி கட்டணம், பதிவுக் கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம் ஆகிய கட்டணங்கள் அனைத்தும் தமிழகத்தில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்த முழு விவரங்களையும் மின்சார வாரியம் தற்போது வெளியிட்டிருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

100 ரூபாயாக இருந்த பதிவு கட்டணம் தற்போது 200 ரூபாயாகவும், 500 ரூபாயாக இருந்த இணைப்பு கட்டணம் ரூபாய் 1000 ஆகவும், ரூபாய் 600 ஆக இருந்த மீட்டர் காப்பீட்டு கட்டணம் ரூபாய் 750 ஆகவும், 1400 ரூபாயாக இருந்த வளர்ச்சி கட்டணம் தற்போது 2800 ரூபாயாகவும், 200 ரூபாயாக இருந்த வைப்பு தொகை தற்போது ரூபாய் 300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஆள் இல்லாமலேயே மின் பயன்பாட்டினை கணக்கிடும் கருவி விரைவில் பொருத்தப்படும் எனவும், ஸ்மார்ட் கருவி பொருத்திய பிறகு ஒரு முனை மின் இணைப்பு மீட்டர் வைப்புத் தொகை கூடுதலாக ரூபாய் 5200 வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here