முதன்முதலாக மின்சாரத்தை பார்க்கும் பழங்குடியின மக்கள்.., 25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு!!

0
முதன்முதலாக மின்சாரத்தை பார்க்கும் பழங்குடியின மக்கள்.., 25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு!!
முதன்முதலாக மின்சாரத்தை பார்க்கும் பழங்குடியின மக்கள்.., 25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குரங்குமேடு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் மின் இணைப்பு வழங்கப்பட்டதை அடுத்து பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

பழங்குடியின மக்கள்

தமிழ்நாடு அரசு பழங்குடியின மக்களுக்கு நிதியும் சலுகையும் வழங்கி வழங்கி வந்தாலும், இன்றளவும் சில கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். அதில் ஒன்றாக குன்னூரில் உள்ள குரங்கு மேடு கிராமமும் உள்ளது. இந்த கிராமத்தில் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் விவசாயம், கால்நடை வளர்ப்பு, தேயிலை போன்ற தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ரூ. 2 லட்சம் வரை வழங்கும் திட்டம்! அரசு அறிவிப்பு!!

இங்கு பசுமை வீடு திட்டத்தில் 3 வீடுகள் கட்டிக் கொடுத்தாலும், அந்த வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கிராமத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்த இந்த கிராமத்துக்கு தற்போது தமிழக அரசால் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த கிராமத்துக்கு மின் வசதி கிடைத்ததற்கு அந்த கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here