மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., அப்லோட் வேண்டாம்! வந்தாச்சு ஓடிபி Method! இதுலயும் சிக்கலா?

0
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., அப்லோட் வேண்டாம்! வந்தாச்சு ஓடிபி Method! இதுலயும் சிக்கலா?
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு., அப்லோட் வேண்டாம்! வந்தாச்சு ஓடிபி Method! இதுலயும் சிக்கலா?

மின் இணைப்பு எண்ணுடன் , ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளில் அரசால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இதிலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

சிறிய சிக்கல்:

தமிழகத்தில் மின் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. இலவச மின்சாரம் பெறுவோர் மற்றும் மின் பயன்பாட்டாளர்கள் அனைவரும் இந்த இணைப்பை செய்து முடிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்கள் மின் இணைப்பில் பிரச்சனை ஏற்படும் என்றும் மின்சார வாரியத்துறை எச்சரித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

, இதற்கான காலக்கெடு கடந்த மாதம் துவங்கி இந்த மாதம் 31 வரை இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயனர்கள் ஆதார் எண்ணை இணைத்து முடித்ததும், ஆதார் கார்டையும் அப்லோடு செய்ய வேண்டும் என்ற சேவை நடைமுறையில் இருந்தது. இதில் சிக்கல்கள் எழுந்ததால் தற்போது, மொபைல் எண் வெரிஃபிகேஷன் மட்டும் செய்து, ஓடிபி எண்ணை உள்ளிட்டால் மட்டும் போதும். ஆதார் கார்டு அப்லோடு செய்ய வேண்டாம் என அரசு அறிவித்தது.

இந்த வழிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சனை தீர்ந்தவுடன், தற்போது சில நேரங்களில் மின்சார துறையின் இணையதள பக்கத்தில் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் இந்த இணைப்பை செய்து முடித்த பயணங்கள் மின்கட்டணம் கட்டும் போது, சில நேரங்களில் குளறுபடி ஏற்படுகிறது. இது குறித்து அறிவித்த மின்வாரியத்துறை, சர்வர் பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here