திட்டமிட்டபடி 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவோம் – இந்திய தேர்தல் ஆணையர் உறுதி!!!

0

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடத்துவோம் என இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இதில் கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை காலம் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வருகிறது.உத்தரபிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைய உள்ளது.

இதையடுத்து, இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை காலம் முடியும் முன்னர் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் பரவி வருவதால் சில மாநிலங்களவை இடைத்தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவோம். கொரோனா உச்சத்தில் இருந்தபோதும் பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடத்தியுள்ளோம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here