தமிழகத்தில் மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை?? உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

0

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போது அதன் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்ககூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் மிக பாதுகாப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்தலில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான சம்பவங்கள் அரங்கேறியது. வேளச்சேரி தொகுதியில் மறுதேர்தல், பிரச்சாரத்தின் பொழுது கொரோனா நடவடிக்கைகள் பின்பற்றாதது போன்ற பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு தேர்தல் ஆணையம் தான் முழு காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கமாக தெரிவித்தது. தேர்தலின் பொழுது பண பட்டுவாடா சம்பவங்கள் பல அரங்கேறியது. இதனால் பல புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

பாரதி கண்ணம்மாவில் இணையும் ரக்சன்?? வைரலாகும் புகைப்படம்!!

தற்போது மே மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இவர் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here