Friday, April 19, 2024

செப்டம்பர் வரை தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Must Read

திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிக்கு காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்து உள்ளது.

தொகுதிகளுக்கு தேர்தல்:

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி அவர்கள் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அதே போல் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ காத்தவராயன் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதழ் அந்த இரு தொகுதிகளுக்கும் எம்எல்ஏ இடம் காலியாக இருந்து வந்தது. இதனால், தேர்தல் நடந்த தேவையும் இருந்து வந்தது.

ஐபிஎல் 2020 போட்டிகள் – செப்டம்பர் 19ல் தொடங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும்..!

election commision of TN
election commision of TN

இந்த தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவும் செய்து இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவலால் அனைவரும் பொது முடக்கத்தில் இருப்பதால் தேர்தல் நடத்த சீரான சுழ்நிலை இல்லை என்று தான் குறை வேண்டும்.

கொரோனா நடவடிக்கை:

பொதுவாக, ஒரு தொகுதிக்கு ஆள் இல்லை என்றால் , அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே சட்டம், ஆனால், இப்பொது கொரோனா பரவும் அச்சம் இருப்பதால், தேர்தல் நடத்த வாய்ப்புகள் குறைவும், அதுவும் மக்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறையிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியது.

election
election

அதில் அவர்கள் கடைசியாக முடியும் செய்தது, மக்களின் நலன் கருதி, மற்றும் அரசு அறிவித்து உள்ள சட்டங்களையும் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலை செப்டம்பர் 7 ஆம் தேதிவரை நடத்த இயலாது என்று தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மற்ற மாநிலங்களிலும் கூட..:

இது தமிழகத்தில் மட்டும் இந்த சூழ்நிலை இல்லை, மற்ற மாநிலங்கள் ஆன பீகாரில் வால்மீகி நகர் மக்களவை தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் 2 சட்டப்பேரவை தொகுதி, அசாம், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் தலா ஒரு இடம் என 6 மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. இந்த தொகுதிகளை தவிர மற்ற 47 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பின்னர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -