தமிழகம், புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் – முழு விவரம்!!

0

தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தேதி குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகள் முனைப்புடன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் டெல்லியில் தேர்தல் குறித்த ஆலோசனையையும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தலைமை ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.18 கோடி பெண்கள், 3.08 கோடி ஆண்கள் மற்றும் 7,200 மூன்றாம் பாலினத்தவர்கள்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசும் சுனில் அரோரா கூறியதாவது,

  • தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
  • பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முந்தைய தேர்தலை விட அதிக அளவாக 57% வாக்குப்பதிவு.
  • கொரோனா அச்சம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தலை நடத்துகிறோம்.
  • தொகுதிகள்: தமிழகம் 234, புதுச்சேரி – 30, கேரளா 140, மேற்குவங்கம் 294, அசாம் 126.
  • சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.
  • தமிழகத்தில் 234 தொகுதியில் 44 எஸ்சி மற்றும் 2 எஸ்சி தொகுதிகள் உள்ளன.
  • தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
  • கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 34.73% அதிக வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பு.
  • அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தரைதளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவு.
  • வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது.
  • 5 மாநிலங்களில் 2.7 லட்ச வாக்குப்பதிவு மையங்கள்.
  • 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு.
  • வீடு வீடாக சென்று 5 பேர் மட்டும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும்.
  • 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் தபால் ஒட்டு அளிக்கலாம்.
  • வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • வேட்பு மனு தங்களின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி.
  • வேட்பு மனு தாக்கலுக்கு வர அதிகபட்சமாக 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
  • அனைத்து வாகு பதிவு மையங்களிலும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்படும்.
  • வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.
  • தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 824 தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.
  • தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம்.
  • தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடைபெறும் என்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
  • விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு.
  • வாக்கு பதிவு மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும்.
  • தமிழகத்தில் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு 30.8 லட்சம் மட்டுமே செலவழிக்க வேண்டும்.
  • அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்.
  • அசாமில் மார்ச் 27ம் தேதி சட்டமன்ற தேர்தல்.
  • மே 2ம் தேதி தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை.
  • கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல். கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
  • தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
  • மார்ச் 12ம் தேதி முதல் தமிழகத்தில் மனுதாக்கல் ஆரம்பம்.
  • மனுதாக்கல் முடிவு தமிழகத்தில் மார்ச் 19ம் தேதி கடைசி நாள்.
  • வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும்.
  • வேட்புமனு திரும்ப பெற மார்ச் 22 கடைசி நாள்.
  • புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும். புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here